உடலை பற்றி அறிந்துக் கொளவ்தில் மனிதன் சலித்துப் போவதே இல்லை. ஆத்மா, உடல் மற்றும் மனமானது உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களின் தரும் ஆற்றலைக் கொண்டு இயங்குகிறது. நமது முதுகு தண்டுவடத்தில் இருந்து துவங்கும் சக்கரமானது நமது உச்சந்தலையில் நிறைவடைகிறது. இந்த ஏழு சக்கரங்கள் தான் நாம் உயிர்வாழ்வதற்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் முக்கிய காரணியாக திகழ்கிறது. இவற்றில் ஏதேனும் தடுமாற்றங்கள் நிகழும் போது நமக்கு நோய்கள் தாக்குகின்றன. உடலை கவனித்துக் கொள்வது என்பது இந்த சக்கரங்களின் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணிப்பது என்ற பொருளையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.
சக்கரம் – ஒரு விளக்கம்:
சக்கரம் என்பது வட்டம் என்று பொருள் தரக்கூடியது, இது சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய வார்த்தையாகும். இது உடலுக்கு தேவையான ஆற்றல் என்று பொருள்படுகிறது. இந்த ஏழு சக்கரங்கள் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மையமாக திகழ்கின்றது. இது நமது உணர்வுகளை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இயங்குகிறது. இந்த நம்பிக்கையானது இந்துத்துவம் மற்றும் புத்த மதத்தினர் மூலம் உருவானதாக நம்பப்படுகிறது.
மனோ-தத்துவம்
மனோதத்துவ பயிற்சியை மேற்கொள்வது, யோகா தியானங்களில் ஈடுபடுவதன் மூலம் இந்த சக்கரங்களை கண்காணிக்க முடியும். ஒவ்வொரு சக்கரத்திற்கும் சில உடல் பாகங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த உடல் பாகங்களின் இயங்கியல் மற்றும் ஆரோக்கியத்திற்கு இந்த சக்கரங்களின் சுழற்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நாம் தொடர்ந்து மனோதத்துவ பயிற்சியை மேற்கொள்ளும் போது உடல், மனம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ஏழு சக்கரங்களின் இருப்பிடம்
உடலிலுள்ள சக்கரங்களைப் பற்றி நாம் புரிந்து கொள்வதில் அவசியமான ஒன்று அதன் இருப்பிடங்களை கண்டறிவதாகும். அதற்கு நாம் முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடலை ஆழ்ந்து நோக்குவதன் மூலம் சக்கரங்களின் இருப்பிடங்களை தெரிந்துகொள்ளலாம். இனி ஒவ்வொரு சக்கரங்களின் பெயரையும் அதன் பயன்களையும் பற்றி நாம் பார்க்கலாம்.
மூலாதாரம்
நமது உடலில் முதுகு வடத்திற்கு அருகில் இருக்கும் இந்த சக்கரம்தான் நம் உடலையும் மனதையும் உயிரையும் இந்த பூமியுடன் இணைக்கக் கூடிய சக்தியை பெற்றிருக்கிறது அனைத்து சக்கரங்களிலும் இது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குவதற்கு இதுவே காரணமாகும். இந்த பூமியுடன் நம்மை இணைப்பதற்கான தொடர்பு சங்கிலியாக இந்த சக்கரம் மகத்தான பணியினை செய்கிறது. பூமியிலிருந்து ஆற்றலைப் பெற்று உடலுக்கு அனுப்ப கூடியதாக இந்த சக்கரம் பயன்படுகிறது. உயிர் வாழ்வதற்கான மகத்தான பணியினை இது செய்வதனால் தான் தியானத்தில் இதன் பங்கு முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த சக்கரத்தின் நிறமானது சிவப்பு நிறத்தில் இருக்கிறது.
சுவாதிஷ்டானம்
நமது உடலில் வயிற்று பகுதியில் இந்த சக்கரம் அமைந்துள்ளது. சரியாக சொன்னால் தொப்புளுக்கு சற்று கீழே அமைந்துள்ள இந்த சக்கரமானது மனித உணர்வுகளை கட்டுப்படுத்த கூடியதாக இருக்கிறது. நினநீர்கணு என்று அழைக்கப்படும் உடலில் உள் உறுப்பானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது, உடலில் நோய் இருக்கும் பகுதியை கண்டறிவதிலும் முக்கிய பங்கு வகிக்கக் கூடியது ஆகும்.
அதை இந்த சக்கரத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் உடலுக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய சுரப்பியாகவும் இந்த சக்கரம் செயல்படுகிறது. எனவே தான் கல்யாணம் ஆனவர்கள் இந்த சக்கரத்தினை மேலும் தூண்டக் கூடியதாக யோக ஆசனங்கள் மற்றும் தியானங்களில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றனர். இந்த சக்கரத்தினை அதிகம் தூண்டி விடாமலும் கவனத்துடன் செயல்பட வேண்டியதாக யோக வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த சக்கரத்தின் நிறமானது ஆரஞ்ச் நிறத்தில் இருக்கிறது.
மணிப்பூரகம்
சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. சுவாதிஷ்டானத்தை போன்று தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது.
இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல்,ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன. இந்த சக்கரமானது நமது சுய ஒழுக்கம், சுய தன்னம்பிக்கை மற்றும் வெற்றியினை ஊக்குவிக்கக் கூடிய சக்கரமாக இயங்குகிறது.
மேலும், இது ஒரு நுன் உணர்வுகளை உருவாக்குகிறது. அதாவது எதிர்காலத்தில் நமது உடல் மற்றும் உயிருக்கு எதிராக ஏதெனும் பிரச்சனைகள் வர இருக்கின்றன என்ற நுன் உணர்வை நமக்கு தரும் ஆற்றலை இந்த சக்கரம் பெற்றிருக்கிறது. இந்த சக்கரமானது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது
அனாகதம்
இருதய சக்கரம் என்றழைக்கப்படும் இந்த சக்கரமானது நமது நெஞ்சுப்பகுதியில் இருக்கிறது. காதல், அன்பு, நட்பு, பண்பு, உண்மை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய மற்றவர் தூண்டக்கூடிய சக்கரமாக இது இருக்கிறது. தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன. நமது மனதிற்கு தேவையான ஆற்றலை தரக் கூடியதாக இந்த நான்காவது சக்கரம் செயல்படுகிறது. இதன் நிறம் பச்சையகும்.
விசுத்தி
ஐந்தாவது சக்கரமான இந்த சக்கரம் மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்திருக்கிறது. உங்களைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையிலான பயன்பாடு இந்த சக்கரம் செய்கிறது அதாவது உங்களது பேச்சுதிறனை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இதன் நிறம் நீல நிறமாகும்.
ஆக்னா சக்கரம்:
இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளை, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய உடல் உறுப்புகள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. உங்களை பற்றியு உலகத்தை பற்றியும் அறிந்துக் கொள்வதற்கு இந்த சக்கரம் பயன்படுகிறது. இந்த சக்கரத்தின் நிறமானது இண்டிகோ நிறத்தினை கொண்டிருக்கிறது.
சகஸ்ரஹாரம்
இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. ஏழாவது சக்கரமான இது இருப்பதிலேயே மிக வலிமையான சக்கரமாகும் சாதாரண மனிதர்களால் கட்டுப்படுத்தக் கூடியதாக இந்த சக்கரம் இருப்பதில்லை உச்சந்தலையில் இருக்கும் இந்த சக்கரமானது நம் உடலின் ஆற்றலை வானத்திலிருந்து பெற்றுத் தரக் கூடியதாகவும் இருக்கிறது புத்த நிலையில் இந்த சக்கரத்தினை கட்டுப்படுத்தக்கூடியது நிர்வாணம் என்ற பெரிய நிலையை அடைந்தார். இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.