வாங்க பதநீர் குடிக்கலாம்

பதநீர் என்கிற இயற்கை டானிக்

வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம் நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது என்று,நவீன அறிவியலும் இதை தான் சொல்கிறது பதநீரில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் அமினோ அமிலங்கள் நமது மூளைக்கு தேவையான ஊட்டங்களை வழங்கி நம்மை சாந்தபடுத்தி சந்தோசமாக வைத்து கொள்வதால் நாமும் நமது சுற்றமும் சந்தோசமாக இருக்கலாம் ….

பதநீர் குடிக்க மறந்ததால் தமிழக மக்கள் இன்று நோயின் பிடியில் பன்னாட்டு மருந்து உற்பத்தி கம்பெனிகளின் சோதனை எலிகள்.

பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது. 40% மேலுள்ள சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்த பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்க்கரை புகுத்தபட்டதனால் என்பதையும் உணரமுடிகிறதா? சில பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது எது…..

பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு அரவே இருக்காது, மகப்பேறு காலங்களில் பால் சுரப்பு மிக அதிகமாக இருக்கும்,கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் இருக்காது, பல் சம்மந்தமான குறைபாடுகள் இல்லை …..

குறிப்பாக பெரும்பாடு எனப்படும் அதிஉதிரபோக்கிற்கு மிகச்சிறந்த மருந்து ஒரு மரத்து பதநீர் அனுபவ வைத்தியம்

பதநீர் அருந்தும் ஆண்களுக்கு முடி நரைக்காது 60 வயதிற்கு மேல் தான் நரைவரும்,வயோதிகம் ஏற்படாது இளமையாக இருக்கலாம், இன்று பெருமளவு பிரச்சினை ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாடு தான்,பதநீர் குடிப்பவர்ககளுக்கு நிச்சயம் இந்த குறைபாடுகள் ஏற்படாதற்கு காரணம் பதநீரில் மிகுதியாக உள்ள இரும்பு,கால்சியம்,அமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள் தானே ….

தநீர்… பனையில் இருந்து கிடைக்கும் ஒருவித பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.

பனையின் நற்பண்புகள் தமிழர்கள் அறியாத ஒன்றல்ல……

கள்ளு குடிக்கலாமே எதற்காக இராசயணம் கலந்த சுண்ணாம்பு சேர்க்கும் பதநீர்?தீங்கில்லையா?

சுண்ணாம்பு பயன்படுத்தி எடுக்கபடும் பதநீர் தீங்கை ஏற்படுத்தும்

கள்ளை விட சுண்ணாம்பு பூசப்படும் பதநீர் தான் உயர்ந்தது …….

முட்டியில் பூசப்படும் சுண்ணாம்பு 2+ அயனியாக மாற்றம் பெற்று சவ்வூடுபரவல் தத்துவம் மூலமாக ஊடுருவி பதநீரில் உள்ள பாஸ்பரஸ் சல்பர் மெக்னீசியம் இரும்பு போன்ற அயனிகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றம் செய்வது மட்டுமின்றி அவற்றை நொதித்தல் மூலம் கெட்டுபோகாமலும் உயிர்ம அமிலங்கள் சிதையாமலும் தடுப்பது சுண்ணாம்பு அயனிகள் தானே ? சுண்ணாம்பு தான் anti bacterial பூஞ்சனம் உருவாகாமல் தடுக்கிறது …..

கள்ளை குடிப்பதால் உடலில் ஸ்டார்ச்சு உருவாகி உடனடியாக புளிப்பை உருவாக்கி ஆல்கஹால் தன்மை பெருகிறது இந்த அமில உணவானது actity யாக உடலை மாற்றுகின்றது இது உடலுக்கு தீமை தானே?

பதநீரில் உள்ள கால்சியம் அயனிகள் உயிர்ம அமிலங்கள் சிதையாமல் பார்த்து கொள்வதும் இந்த முட்டியின் வெளிபகுதியில் பூசப்படும் சுண்ணாம்புவில் உள்ள கால்சியம் அயனிகளை உள்வாங்கி குறிபிட்ட நேரம் நொதித்தல் மூலமாக கெட்டு போகாமல் பார்த்து கொள்கிறது அது மட்டுமின்றி இவற்றில் H3O ம் உண்டு அதனால் தான் பதநீர் சிறந்த மருந்து…..பதநீர் கார உணவாக தான் இருக்க கூடும் ஆய்வு செய்ய வேண்டும் ….

நாம் அனைவருக்கும் தெரியும் கார உணவு தான் உடம்புக்கு நன்மை பயக்கும் அமில உணவு உடலில் நோய்களை வரவழைக்கும் என்று…

பூமியில் உள்ள தனிமங்களை அயனியாக்கும் சிறப்பு பண்பு பெற்ற மரங்கள் பனை, தென்னை,மருதமரம் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் ….

ஏனெனில் …..

உயரமாக வளரும் மரங்களில் பனையும் தென்னையும் மிகவும் குறிப்பிடத்தக்கது மின்னலின் போது ஏற்படும் அதிகப்படியான மின்சக்தியை இந்த மரங்கள் உள்வாங்குகிறது அதனால் பூமியில் உள்ள உலோகங்களை அயனியாக மாற்றி பூமியில் இருந்து உறிஞ்சபட்டு அதன் தண்டு வழியாக உச்சிக்கு கடத்துகிறது அயனியாக்கம் செய்யப்பட்ட அங்கக சத்துக்கள் அயனியாக மாற்றபட்ட உலோகங்களை கிரகிக்கும் பனை தென்னை மரங்கள் நுண்ணூட்ட சத்தாக மாற்றி நமக்கு பதநீர் தருவதால் தான் இதனை கற்பத்தரு என்றழைக்கிறோம்.

சித்தமருத்துவத்தில் சுண்ணம் எனப்படும் சுண்ணாம்பு சுத்தி செய்யபயன்படுத்தும் பொருள் இளநீரும் பதநீரும் தான் அவ்வளவு ஏன்?காடி உருவாக்க இவைகளை தான் பயன்படுத்தம் படி சுவடி குறிப்புகள் கூறுகின்றான….

இரண்டு மாதம் தொடந்து பதநீர் பயன்படுத்திய பின்பு உங்கள் சீறுநீரக செயல்பாட்டை சோதனை செய்து பாருங்கள் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் வலுவாகி அதன் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் மூட்டுவலி உயர்இரத்த அழுத்தம் குறைந்துள்ளது அதற்கான தரவுகள் உண்டு …..வாங்க பதநீர் குடிக்கலாம்….

பாரம்பரியம் பழகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.