“குக்கர் உணவு,எவ்வளவு கெடுதல்”.மண்சட்டி உணவு எவ்வளவு நன்மை.வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம்.

இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் பட வேண்டும் என்று பழங்காலத்தில் கூறுவர். தற்போது பிரஷர் குக்கரில் சமைக்கும் போது உணவில் காற்று புகாத வண்ணம் அதை மூடி நாம் சமைக்கின்றோம்.

முன்பிருந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கைது செய்யப்படும் பலம்மிக்க குற்றவாளிகளுக்கு அலுமினிய பாத்திரத்தில் வைத்து, பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை வழங்குவார்கள். ஏனெனில் பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை சாப்பிட்டால் பலவீனமாக்கி விடும் என்பதுதான் காரணம். இந்த பழக்கம் தான் தற்போது உலகிலும் பரவி வருகின்றது. ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற பழக்கத்தை நாம் இன்னும் கடைபிடித்து வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லித் தந்த மண்சட்டி உணவை நாம் பயன்படுத்துவதே இல்லை.

உணவுப் பொருட்களை விளைவிக்க நாம் பல மாதம் காத்திருக்கின்றோம். ஆனால் அதை சமைப்பதற்கு அரை மணி நேரம் கூட காத்திருப்பதில்லை. இயற்கை சத்துக்களும் பிரஷர் குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி போன்று வெளியேறிவிடுகிறது. பிரஷர் குக்கரை தவிர்த்து மண்பாண்டம், வெண்கலம், பித்தளை, சில்வர் போன்றவற்றில் சமைப்பதில் 90 முதல் 100 சதவீதம் வரை சத்து உணவில் இருக்கும்.

மண்பாண்டங்கள் தொடங்கி எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் என நாம் உணவு சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன. இவற்றில் கால மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் ஓர் அங்கமாக பிரஷர் குக்கரில்தான் பெரும்பாலானோரின் வீடுகளிலும் உணவு சமைக்கப்படுகிறது. இதனால் சமையலுக்கான நேரம் கணிசமாக குறைந்தாலும், பிரஷர் குக்கரில் சமைப்பது ஆபத்தானது என்ற எண்ணமும் அச்சமும் பலருக்கும் இருக்கிறது.

பிரஷர் குக்கர் மட்டுமில்லாமல் எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் அவற்றின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. மீறினால்தான் ஆபத்து. குறிப்பாக பிரஷர் குக்கரில் எல்லா வகையான உணவுகளையும் நேரடியாக சமைப்பதைத் தவிர்த்து, குக்கரின் உள்ளே ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே சிறந்தது. அத்துடன் பிரஷர் குக்கரின் கொள்ளளவுக்கு ஏற்ற உணவுப் பொருட்களை வைத்து, தேவையான அளவு விசில் விட்டு சமைப்பதால் எந்தப் பிரச்னையும் வராது. பிரஷர் குக்கரில் சமையல் செய்வதால் நேரம் கணிசமாக குறைவதுடன், சத்துக்களும் ஆவியாகிச் செல்லாமல் தடுக்கப்படும். 

“இத்தாலியின் ‘ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ்’ (journal of food science) நிறுவன ஆராய்ச்சிப்படி, வேக வைத்தல் (boiling) முறையில் உணவு தயாரிப்பதால் 40-75 சதவீதமும், வறுத்தெடுத்தல்(roasting) முறையில் 53-90 சதவீதமும், ஆவியில் (steaming) முறையில் 75-90 சதவீதமும், பிரஷர் குக்கரில் சமைப்பதால் 90-95 சதவிகித ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது”. பிரஷர் குக்கரில் உணவு சமைப்பது நல்லதுதான். ஆனால் எந்த மெட்டலால் ஆன குக்கரில், எவ்வளவு காலம் சமைக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது பிரச்னையின் தன்மை.

அலுமினியம், காப்பர்(Copper), எஸ்.எஸ்.ஸ்டீல்(stainless steel), டைட்டானியம்(Titanium) எனப் பலதரப்பட்ட மெட்டல்களிலும் பிரஷர் குக்கர்கள் செய்யப்படுகின்றன. இவற்றில் அலுமினியம் பிரஷர் குக்கர்தான் விலை குறைவானது. குறிப்பாக எஸ்.எஸ்.ஸ்டீல், காப்பர் மற்றும் டைட்டானியம் மெட்டல்களினால் ஆன பிரஷர் குக்கர்களில் சமைக்கும்போது, உணவுகளில் கலக்கும் மெட்டல்களின் அளவு மிகக்குறைவுதான். இதனால் இத்தகைய மெட்டலால் ஆன பிரஷர் குக்கரில் சமைப்பதால் ஆபத்து இல்லை. அதேசமயம் அலுமினிய குக்கரில் உணவு சமைக்கும்போது ஒரு நாளைக்கு 1-2 மில்லி கிராம் அலுமினிய மெட்டல் உணவின் வாயிலாக நம் உடலில் கலக்க வாய்ப்புள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) அறிக்கை ஒன்றில், நாம் உணவு சமைக்கும் பாத்திரங்களில் இருந்து ஒரு நாளுக்கு 50 மில்லி கிராம் அளவிலான மெட்டல் நம் உணவில் கலக்கலாம். இந்த அளவை மீறி மெட்டல் கலந்தால் மட்டுமே ஆபத்து என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அச்சப்படாமல் அவரவர் திறனுக்கு ஏற்ற பிரஷர் குக்கர்களில் உணவு சமைக்கலாம். அதேசமயம் பிரஷர் குக்கர் மற்றும் எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவற்றில் கீறல்கள் விழுந்திருந்தாலும் விழாவிட்டாலும் அவற்றில் உணவு சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கீறல் விழுந்த பாத்திரங்களில் உணவு சமைப்பதால் அதிகமான மெட்டல் உணவின் வாயிலாக நம் உடலில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.

பிரஷர் குக்கர் உபயோகப்படுத்தி சமைப்பது உடலுக்கு நல்லதா ?

இக்கேள்விகள்  அனைத்தும் விவாதத்திற்கு உரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

Steaming – நீராவியில் சமைப்பது மிகச்சிறந்த முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அரிசியில் ஸ்டார்ச் அதிகமாகக் காணப்படும். அதைக் குக்குரில் சமைக்கும்போது அதிலிருக்கும் ஸ்டார்ச் வெளியேறாமல் தங்கிவிடும்.

அந்த ஸ்டார்ச் மிகுந்த சாதத்தைச் சாப்பிடும்போது உடலில் கார்போஹைட்ரேட் அதிகம் சேர்ந்துவிடும். தொடர்ந்து கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதால் உடல்எடை அதிகரிக்கும்.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற வாழ்வியல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் உடல் எடை அதிகரிப்பதுதான் முக்கியக் காரணமாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.

உணவை சமைப்பது நீராவி தானே தவிர அதில் உள்ள Pressure இல்லை , அதனால் 90% சத்து குறைபாடு நடக்க வாய்பில்லை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் பிரஷர் குக்கர் பயன்படுத்தி சமைக்கும் போது LECTIN எனப்படும் ஊட்டச்சத்து குறைகிறது என்பது உண்மையே. Slow cooking சிறந்த முறை என்றே சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.