அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து. ஒரே பாடல் மூலம் விளக்கிய..சித்தர்கள்

சித்தர்கள் எழுதிய ஒரே ஒரு பாடலில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

முன் காலத்தில் நம் சித்தர்கள் அருளிய எல்லா நோய்களுக்கும் மருந்துதான் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் காலத்தால் அழியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நோய்க்கு மருந்து இது தான். இதை யாராலும் மாற்ற முடியாது, மாறவும் செய்யாது. இது “அருந்தமிழ் மருத்துவம் 500” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்று நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக ஒரே ஒரு பாடலை பாடியுள்ளனர். இது இருந்தால் மருத்துவரை நாட வேண்டிய அவசியமில்லை.

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை

முடி வளர நீலி நெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

எலும்பிற்கு இளம் பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

பசிக்கு சீரகமிஞ்சி

கல்லீரலுக்கு கரிசாலை

காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்

மூட்டுக்கு முடக்கத்தான்

அகத்திற்கு மருதம்பட்டை

அம்பைக்கு வேம்பு மஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை

உணர்ச்சிக்கு நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகப்பட்டை

களத்திற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ் தாமரை

வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு தாமரைப்பூ

சிறுநீர்க்கல்லுக்கு சிறுகன்பீளை

காய்ச்சலுக்கு நிலவேம்பு

விக்கலுக்கு மயிலிறகு

வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி

நீர்கோவைக்கு சுக்கு மிளகு

நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீர்

வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணெய்

சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

நஞ்செதிர்க்க அவரிவெட்டி

குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

பெருவயிற்றிக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்

அக்கிக்கு வெண்பூசணை

ஆண்மைக்கு பூனைக்காலி

விதைநோயா கழற்சிவிதை

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

கானாகடிக்கு குப்பைமேனி

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தென்கொள்ளு

உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

அறிந்தவரை உறைந்தேனே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.