கை குத்தல் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோர் செயற்கையான முறையில் பக்குவம் செய்யப்பட்ட அரிசியை வாங்கி உணவாக உட்கொள்கிறோம். இதனால் பலருக்கும் பலவிதமான உடல் நல பாதிப்புகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. இன்றும் கிராமப்புறங்களில் கைக்குத்தல் அரிசியை கொண்டு சமைத்து சாப்பிட்டு நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்கின்றனர். இந்த கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கைக்குத்தல் அரிசி பயன்கள்

மலச்சிக்கல்
இன்று பலரும் நார்ச்சத்து இல்லாத, கொழுப்பு அதிகம் நிறைந்த மாமிச உணவுகளை சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது மலச்சிக்கல் பிரச்சனை உண்டாக்குகிறது. தினமும் நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்

ஊட்டச்சத்து

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் கை குத்தல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லாது நான்கு முறை கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.

இதயம்

உடலில் உயிர் இருப்பதற்கும், அனைத்து உடல்பாகங்களும் சீராக இயங்குவதற்கும் அவசியமான ஒரு உறுப்பாக இதயம் இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். நார்ச்சத்து மிகுந்த கை குத்தல் அரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை கை குத்தல் அரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

உடல் எடை குறைப்பு

இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதீத உடல் எடை. இதற்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் கை குத்தல் அரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் ஒரு வேளையாவது கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு

இன்று உலகில் பலரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு நோயாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவத்தில் நமது உடலில் இயற்கையிலேயே சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் சாப்பிட்டு வருவதால் இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைகிறது..

குடல் புற்று

இன்று உலகில் பெரும்பாலான மக்கள் ரசாயனங்கள் கலந்த செயற்கை உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

ஆஸ்துமா

மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்று ஆஸ்துமா நோய். செலினியம், மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் அதிகம் உள்ள கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோயின் கடுமை தன்மை குறைவதாக மேலை நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

எலும்புகள்

உடலில் எலும்புகள் வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும். கை குத்தல் அரிசியில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு உடலில் எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது.

பித்த பை கற்கள்

நச்சுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு பித்த பைகளில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கை குத்தல் அரிசியில் பொட்டாசியம் சத்து அதிகமுள்ளது. இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வரும் போது உடலில் பித்தபையில் நச்சுகள் மற்றும் இதர கழிவுகள் சேர்வதை தடுத்து பித்த பை கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

கொலஸ்ட்ரால்

உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர். நமக்கு ஏற்படும் இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க கை குத்தல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.