தாவரங்களில் மரம், செடி, கொடி, கிழங்கு என பலவகைகள் உள்ளன. இதில் பிற மரங்களையோ அல்லது பிற பொருட்களை பற்றி வளரும் தாவரங்களை கொடிகள் எனப்படும். இந்த கொடி வகை தாவரங்களில் பல மூலிகை வகைகளை சேர்ந்ததாக இருக்கின்றன. அந்த வகையில் நமது நாட்டில் சில இடங்களில் அதிகளவில் காணப்படும் ஒரு வகை கொடி தாவரம் தான் கழற்சிக்காய். இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர். இந்த கழற்சிக்காயின் இலைகள், காம்புகள், விதைகள், வேர்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த கழற்சிக்காய் பயன்பாடுகளை குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
கழற்சிக்காய் பயன்கள்
நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் மற்றும் காயங்கள் சமயங்களில் புரையோடிப்போய் நமக்கு வலுவுடன் மிகுந்த வேதனையை தரும். புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும். தழும்புகளேற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது. கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும். வயிற்று பிரச்சனைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலிருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும். ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும் நச்சுத்தன்மையை அழிப்பது போன்ற செயல்களை நமது ஈரல் செய்து வருகிறது. கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஆண்கள் உடல்நலம் ஒரு சில ஆண்களுக்கு சமயங்களில் அடிபடுவதாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோஅவர்களின் விரைகள் வீங்கிவிடும். இப்படியான சமயங்களில் விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.
தொழுநோய் என்பது ஒரு வகை கிருமி உடலில் தொற்றிக்கொண்டு கை கால் விரல்கள், மூக்கு, உதடு போன்ற உறுப்புகள் உடலின் இன்ன பிற பாகங்கள் போன்றவற்றை பாதித்து, அவற்றை அழுகி போகச்செய்யும் கொடுமையான வியாதியாகும். கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் கட்டுப்படும்.
யானைக்கால் வியாதி என்பது ஒரு வகை கொசு கடிப்பதால், அதனிடமிருந்து பரவும் கிருமி உடலில் தொற்றி கால்கள், நிண நீர் சுரப்பிகளையும் பாதிக்கிறது. கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 10 க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை இந்த கழற்சிக்காய் என்ற தெலுக்காய்க்கு உண்டு.
குழந்தைகள் பெரியவர்கள் என யாருக்கும் அலர்ஜி உண்டாகலாம். கழற்சிக்காயில் பட்டுசியா என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கசப்பை தரக்கூடியது. இதனை அனைத்து விதமான அலர்ஜிகளுக்கும் பயன்படுத்தலாம். இது மிக சிறந்த பலனை தரக்கூடியது. இந்த பகுதியில் கழற்சிகாய் எந்த நோய்களுக்கு பயன்படுகிறது என்பதையும், அதை எப்படி பயன்படுத்துவது பற்றி பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறை:
இந்த கழற்ச்சிக்காயில் கடுமையான ஓடு உள்ளது. இந்த ஓட்டை எடுத்துவிட்டு அதன் உள்ளே உள்ள பருப்பை மருந்தாக பயன்படுத்த வேண்டும். இந்த ஓடு மிகவும் வலிமையானது, கையில் குத்திவிடக்கூடும். என பொருமையாக இதன் ஓட்டை நீக்க வேண்டியது அவசியம்.
யானைக்கால் நோய்
யானைக்கால் நோயின் போது கடுமையான குளிர் ஜீரம் வரும். பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் குளிர் ஜீரம் வரும். மலேரியா வந்ததை போல கடுமையான ஜீரம் வரம். இதற்கு இரத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும். இது யானைக்கால் நோயின் அறிகுறியாகும்.
இந்த யானைக்கால் நோய்க்கு கழற்சிக்காய் மிக சிறந்த மருந்தாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மருந்து செய்முறை:
இந்த கழற்சிக்காயின் பருப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, அதனுடன் ஐந்து மிளகுகளை இட்டு அரைத்து பொடியாக்கி, இதனை காலை, மாலை என இருமுறை சாப்பிட்டு வர வேண்டும். இது யானைக்கால் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
மாதவிலக்கு பிரச்சனை
பெண்களுக்கு மாதவிலக்கு இடைக்காலத்தில் நின்று போதலுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. மாதவிலக்கு மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்களுக்கு நின்று போதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதனை மருந்தாக பயன்படுத்தலாம்.
மருந்து செய்முறை
மாதவிலக்கு பிரச்சனைக்கும் ஒரு கழற்சிக்காய் பருப்புக்கு 5 மிளகுகளை வைத்து அரைத்து பொடி செய்து சாப்பிடலாம். அல்லது மொத்தமாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், 100 கிராம் கழற்சி பருப்புக்கு, 25 கிராம் மிளகு சேர்த்து அரைக்கவும்.
மிளகை அரைக்கும் முன்னர் அதன் பச்சை வாசம் போகும் வரை வாணலியில் இட்டு நன்றாக வறுக்க வேண்டும். அதே போல கழற்சி பருப்பையும் வறுத்துக்கொண்டால், அதில் இருக்கும் ஈரத்தன்மை போய் மருந்து நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
விதைப்பை பிரச்சனை
விதைப்பை பிரச்சனை, அதாவது விதைப்பையில் நீர் இறங்கி, அதிகமாக காய்ச்சல் வரும் சூழ்நிலையில் இந்த கழற்சிக்காய் மருந்தாக பயன்படுகிறது. இந்த நோய் ஹைட்ரோசிலி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கழற்சிக்காய் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய ஒன்று.