எச்சரிக்கை..!கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை உணவில் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்…

நாம் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சமையலில் பயன்படுத்துவது வழக்கம். முன்பெல்லாம் வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தி வந்த நாம் தற்போது கடைகளில் இருந்து வாங்கிக் கொள்கிறோம். இது நமக்கு என்ன பாதிப்பை கொடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை. ஒருவர் மருத்துவமனைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் புற்றுநோய் கட்டி போன்று உருவாகியுள்ளது என கூறியதோடு அது உருவாக்கியதன் காரணத்தையும் ஆராயத் தொடங்கியுள்ளனர்.

அப்போது புற்றுநோய் கட்டியின் உள்ளே பியூரிட்டன் என்ற மருந்தின் வேதியல் கூறுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த பியூரிட்டன் என்பது விவசாயிகள் இஞ்சியை பயிரிடும் போது தூவும் மருந்து. இது இஞ்சியின் மேல் தோலில் படிந்து கொள்ளும். இதனால்தான் இஞ்சியின் தோல் விஷம் என கூறுவதுண்டு. நாம் வீடுகளில் இஞ்சியை பயன்படுத்தும்போது அதன் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்துவோம்.

ஆனால் இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பொறுமையாக இஞ்சியின் தோலை எடுப்பதில்லை மொத்தமாக போட்டு அரைத்து பேஸ்ட் தயார் செய்கின்றனர். இதனால் தோலில் படிந்துள்ள பியூரிட்டன் எளிதாக நமது உடலுக்குள் சென்று தீங்குகளை ஏற்படுத்துகின்றது. நாமே கடையில் பணம் கொடுத்து இது போன்ற உடல்நல கேடுகளை வாங்குவதைக் காட்டிலும் இஞ்சி பூண்டு தனியாக வாங்கி ஆரோக்கியமான பேஸ்ட் தயார் செய்து கொள்வது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.