பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கி உடலின் சீரான இயக்கத்திற்கு இவை பெரிதும் உதவுகின்றன. ஆனால் தற்போது விஷயம் என்னவென்றால் இப்போது கடைகளில் கிடைக்கும் பழங்கள் உண்மையில் நமக்கு நன்மை செய்கின்றனவா என்பது தான். ஏன் என்று யோசிக்கிறீர்களா…?
நன்றாக யோசித்து பார்த்தால் உங்களுக்கே புரியும். தற்போது வரும் பழங்களில் விதைகள் இருக்கின்றனவா என நீங்கள் கவனித்து பார்த்துள்ளீர்களா… கவனித்து இருந்தால் தெரியும். முன்பெல்லாம் பழங்களில் அத்தனை விதைகள் இருக்கும். ஆனால் தற்போது கிடைக்கும் பழங்களில் ஓரிரு விதைகள் அல்லது விதைகளே இல்லாமல் இருக்கிறது.
இப்படிப்பட்ட பழங்களை சாப்பிடுவது நமக்கு நன்மையை காட்டிலும் அதிக தீமையை தான் ஏற்படுத்துகிறது.
இப்படி வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை பார்க்கும் போது நிச்சயமாக நமக்கு ஒரு வியப்பு ஏற்படும். இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்த நிகழ்வுக்கு மனிதர்கள் தான் காரணம். ஒரு பழத்தில் என்ன வகையான சத்துக்கள் உள்ளது என்பதையும் அது என்ன தாவர வகை என்பதையும் விதைகள் தான் முடிவு செய்கின்றன. விதைகளை வைத்தே ஒரு மரம் எவ்வாறு இருக்கும், அதன் கிளைகள் மற்றும் இலைகள் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லி விடலாம்.
அதே போல பழத்தில் உள்ள சத்துக்களை காட்டிலும் விதைகளில் அதிக அளவில் சத்துக்கள் உண்டு. விதைகள் சுவையற்றதாக இருந்தாலும் கூட பழங்களில் உள்ள உயிர் சத்துக்களை விட விதைகளில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது. இது இயற்கை நமக்கு கொடுத்த வரம். விதைகள் இல்லாத பழங்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு நாம் உருவாக்கினாலும் இயற்கை கொடுத்த விதையோடு உள்ள பழங்கள் தான் சத்தானது.
நீங்கள் ஆழமாக யோசித்து பார்த்தால் இந்த விதையில்லா பழங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து உங்களுக்கு புரியும். காடுகள் உருவாவதற்கு முக்கியமான காரணம் பறவைகள் மற்றும் விலங்குகள். பழங்களில் உள்ள விதைகளை சாப்பிடுவதன் மூலமாக இது நிகழ்கிறது. ஆனால் தற்போது கிடைக்கும் விதையில்லா பழங்களை பறவைகள் சாப்பிட்டாலும் அதன் மூலமாக எந்த ஒரு உபயோகமும் கிடையாது. இதனால் மழை பெய்வது தடைபடும். இது இயற்கை சுழற்சியை பாதிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் விதையில்லாத பழங்கள் விதையோடு இருக்கும் பழங்களை காட்டிலும் சத்து குறைவாக உள்ளதால் நமக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் தடைபடுகின்றன. எனவே மக்களே… முடிந்த வரை விதையோடு இருக்கும் பழங்களை வாங்கி உண்ணுங்கள். விதையில்லா பழங்கள் மற்றும் காய்கறிகள் என்றைக்குமே சமுதாயத்திற்கு ஆபத்தானது தான்.