பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும், இந்த காலத்தில் எல்லாமே வேகமா செய்யவேண்டி இருக்கு. அதுவும் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகிறவர்கள் என்றால், பெரும்பாலான இரவு உணவு ஹோட்டலில் ஆர்டர் செய்து தான் உண்ணவேண்டி இருக்கும். நகரங்களில் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தம்பதிகள் பெரும்பாலும் காலை உணவை மட்டும் தான் சமைப்பார்கள். மதிய உணவு அலுவகலத்திலே கொடுத்து விடுவார்கள். இரவு உணவு ஸ்விக்கி கொடுத்துவிடும்.
ஒரு வேளைக்கு, இவர்கள் சமைக்கும் உணவு கூட எல்லாமே இன்ஸ்டண்டாக தான் இருக்கும். இன்ஸ்டன்ட் பிரியாணி, இன்ஸ்டன்ட் சப்பாத்தி, இன்ஸ்டன்ட் இட்லிமாவு என எல்லாமே ரெடிமேட் ஆக மாறியாச்சு. நாமும் அவசரத்தில், அந்த இன்ஸ்டன்ட் உணவுகளில் என்னவெல்லாம் கலந்திருப்பார்கள் என்பதை கூட பார்க்காமல் சூப்பர் மார்க்கெட்டில் விற்பதையெல்லாம் வாங்கி சமைக்கிறோம்.
முன்னரெல்லாம் ஞாயிற்றுக்கிழமை அம்மா பிரியாணி செய்கிறார் என்றால், சனிக்கிழமை இரவு எல்லா பொருள்களும் உள்ளதா என முன்னரே தயாராகி கொள்வார். நாமும் நாளை பிரியாணி என பெரிய எதிர்பார்ப்போடு ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருப்போம். ஆனால் இப்போது? பிரியாணி வேண்டுமா? உடனே சாப்பிடலாம். ஹோட்டலில் அல்ல, நம் வீட்டிலே செய்து சாப்பிடலாம். அதான் இன்ஸ்டன்ட் பிரியாணி மிக்ஸர் கிடைக்குதே?
அதே போல நம் வீட்டில் அம்மா செய்யும் சப்பாத்தி, பூரி போல எழுந்திருக்காது. ஆனால் கடையில் விற்கப்படும் ரெடிமேட் சப்பாத்தியை கல்லில் போட்டதும் பூரி போல எழும். சப்பாத்தி உப்பி வரவேண்டும் என்பதற்காவே சோடா உப்பு, பேக்கிங் தூள், மோனோ சோ டியம் கு ளூட்டாமேட் போன்ற வே திப்பொருட்களை சேர்ப்பார்கள். இவை யாவும் சிறு நீரகத்திற்கு எ திரிகள். ஆதலால் முடிந்தவரை ரெடிமேட் உணவு பொருட்களை வாங்கி சமைப்பதை தவிர்க்கவும்.