உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் தேனின் கலப்படத்தன்மையை சோதனை செய்ய பல வழிமுறைகள் உள்ளது. சமீபத்தில் பிரபலமான தேன் விற்பனை நிறுவனங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படும் தேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சுற்றுசூழல் மையம் மற்றும் அறிவியல் மையம் நடத்திய சோதனையில், பல்வேறு நிறுவனங்கள் தேனில் சர்க்கரை பாகு கலந்து உறுதி செய்யப்பட்டது. தேனின் மாதிரிகளை சேகரித்து ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் உட்படுத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவலாக இது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தேன் பொருட்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து விற்பனை செய்யப்படும் தேனில் சோதனை நடைபெற்ற நிலையில், முன்னணி நிறுவனங்களான டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு போன்ற 13 நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனையில் பதஞ்சலி, டாபர், ஜண்டு, ஆபிஸ் ஹிமாலயா, ஹை ஹனி போன்ற 10 நிறுவனத்தின் தேனில் கலப்படம் இருப்பது உறுதியானது. இதனைப்போன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேனிலும் சர்க்கரை பாகு இருப்பது உறுதியானது.
இதனைப்போன்று சபோலா, மார்க்பேட் சோனா, சொசைட்டி நேச்சுரல் போன்ற நிறுவனத்தின் தேன்களில் கலப்படம் இல்லாமல் தூய்மையான தேனாக இருப்பதும் தெரியவந்துள்ளது
பொதுநலன் கருதி-
www.groceryd2d.com